பினாங்கின் 217 ஆண்டு பழமையான கபித்தான் கிள்ளிங் பள்ளிவாசல் சமூகங்களிடையிலான நல்லிணக்கத்தை மேம்படுத்தும் முயற்சியாக எல்லாரையும் குறிப்பாக முஸ்லிம்- அல்லாதாரை வருக வருக என வரவேற்கிறது.
ஜார்ஜ்டவுன் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு வருகையாளர்கள் ஜூலை 6ஆம் 7ஆம் நாள்களில்( நாளையும் ஞாயிற்றுக்கிழமையும்) அப்பள்ளிவாசலைச் சுற்றிப்பார்க்க அழைக்கப்படுகிறார்கள். காலை மணி 9.30இலிருந்து மாலை மணி 6வரை அவர்கள் சுற்றிப் பார்க்கலாம்.
இதற்கு மஸ்ஜித் கபித்தான் கிள்ளிங் டாக்வா பிரிவும் அனைத்துலக இஸ்லாமிய பிரச்சாரக் கழகமும் ஏற்பாடு செய்துள்ளன.