எம்ஏசிசி: சந்தேகத்தின்பேரில் நீதிமன்றம் கொண்டுவரப்படுவோருக்கு இனி ஆரஞ்ச் நிற ஆடை கிடையாது

எம்ஏசிசி சந்தேகத்தின்பேரில் நீதிமன்றம் கொண்டு வருவோர் இனி ஆரஞ்ச் நிற ஆடை அணிய வேண்டியதில்லை.

“நிரூபிக்கப்படும்வரை அனைவரும் குற்றமற்றவர்களே என்று கூறும் கூட்டரசு அரசமைப்பு பகுதி 5(1)-க்கு ஏற்ப இம்முடிவு அமைந்துள்ளது”, என்று எம்ஏசிசி தலைமை ஆணையர் லத்திபா கோயா இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.

“எம்ஏசிசி ஊழல் எதிர்ப்பில் விட்டுக் கொடுக்காது அதேவேளை எல்லாக் காலத்திலும் சட்டத்தை மதிக்கும்”, என்றாரவர்.

கைவிலங்கு பயன்படுத்தப்படுவதும் குறையும் என்றாரவர்.

“தேவையான நேரங்களில் மட்டும், எடுத்துக்காட்டுக்கு தப்பி ஓடும் அபாயம் உள்ளபோது அல்லது முரட்டுத்தனத்தை வெளிப்படுத்தும்போது மட்டுமே கைவிலங்குகள் போடப்படும்.

“நீதிமன்றத்துக்குள் கைவிலங்கிட அனுமதி இல்லை”, என்றாரவர்.