பாரிசான் நேசனல் அக்கூட்டணியின் ஆலோசனை வாரியத் தலைவராக முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை நியமனம் செய்ய முடிவு செய்திருப்பதை ஒரு பிற்போக்கான முடிவு என்று முகம்மட் நஸ்ரி அப்துல் அசிஸ் வருணித்தார்.
பிஎன் முன்னாள் தலைமைச் செயலாளரும் நஜிப்பின் விசுவாசியுமான நஸ்ரி, நஜிப் ஆலோசகராக இருப்பது அம்னோவுக்கும் பிஎன்னுக்கும் நல்லதல்ல என்றார்.
“யார் தலைவராக இருந்தபோது (பொதுத் தேர்தலில்) தோற்றோம். அவரால் எப்படிப்பட்ட அறிவுரையைக் கொடுக்க முடியும்.
“என்னைக் கேட்டால் இது பிற்போக்குத்தனம் என்பேன்”, என்றவர் குறிப்பிட்டார்.