ஒராங் அஸ்லிகள் கருத்தடை செய்துகொள்ளக் கட்டாயப்படுத்தப்பட்டார்களா?

சுகாதார அமைச்சு அதிகாரிகள் ஓராங் அஸ்லி பெண்களைக் கருத்தடை செய்துகொள்ளும்படிக் கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படும் செய்தி உண்மையா என்பதைக் கண்டறிய புத்ரா ஜெயா ஒரு விசாரணைக் குழுவை அமைக்கும்.

மலேசியாகினியில் வெளிவந்த அச்செய்தியைப் படித்து “அதிர்ச்சி” அடைந்ததாக பிரதமர்துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி கூறினார். அச்செய்தியில் தெமியார் இன உரிமைகளுக்காக போராடி வரும் நோரா கண்டின், சுகாதார அமைச்சின் நடமாடும் மருந்தகங்களில் பணிபுரியும் தாதியர்கள் கருத்தடை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தன் இன பெண்களை மிரட்டுவதாக தெரிவித்திருந்தார்.

“அரசாங்கம் இதைக் கடுமையாகக் கருதுகிறது . இது குறித்து சுகாதார அமைச்சருடன் விவாதிப்பேன். இது உண்மையா என்பதைக் கண்டறிய ஒரு விசாரணை வாரியமும் அமைக்கப்படும்”, என்றார்.