எக்ஸ்கோமீது போலீஸ் விசாரணை முடிவதற்காக டிஏபி காத்திருக்கிறது

டிஏபி, வீட்டுப் பணிப்பெண்ணைப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பேரா ஆட்சிக்குழு உறுப்பினர் பால் யோங்மீது நடவடிக்கை எடுப்பதற்குமுன் போலீஸ் விசாரணை முடிவதற்குக் காத்திருப்பதாக அதன் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறினார்.

“போலீஸ் விசாரணையின் முடிவுக்காகக் காத்திருக்கிறோம். அதன் அடிப்படையில்தான் எந்தவொரு நடவடிக்கையும் அமைந்திருக்கும்”, என்றாரவர்.

நிதி அமைச்சருமான லிம் அவ்விவகாரம் குறித்து பேராக் மந்திரி புசார் அஹமட் பைசால் அஸுமுவுடனும் பேசியிருப்பதாகவும் கூறினார்.