காணாமல்போன ஜெர்மானியர் மூலு தேசிய பூங்காவில் இறந்து கிடந்தார்

சரவாக்கில், மூலு தேசியப் பூங்காவில், குவா ரூசா குகையைச் சுற்றிப் பார்க்கச் சென்ற ஜெர்மன் நாட்டுச் சுற்றுப்பயணி ஒருவர் இன்று காலை மணி 7-க்கு இறந்து கிடக்கக் காணப்பட்டார்.

பீட்டர் ஹொவர்காம்ப்,66, என்ற அந்த ஜெர்மானியரும் ரொவிசால் ரோபின்,20, என்ற உள்ளூர் சுற்றுப்பயண வழிகாட்டியும் குவா ரூசா குகையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் காணாமல்போனதாக மீரி தீ அணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் லாவ் போ கியோங் தெரிவித்தார். அவர்களில் ஜெர்மானியர் மட்டும் குவா ரூசா ஆற்றில் இன்று காலை பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

இப்போது ரொவிசாலைத் தேடும் பணி தொடர்கிறது என்றாரவர்.

இறந்தவரும் சுற்றுப்பயண வழிகாட்டியும் நேற்று மாலை மணி 5.50க்குk குகையில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதை அடுத்து காணாமல் போனார்கள்.

-பெர்னாமா