பெற்றோர் தீ அணைப்பு வீரர்களுக்கு உதவச் சென்றபோது பிள்ளைகள் தீயில் மாண்ட பரிதாபம்

அவர்களின் பெற்றோர் இருவரும் நேற்றிரவு பூலாவ் இண்டா தொழிலியல் பூங்காவில் தீப் பற்றிக்கொண்ட ஓர் இராசன ஆலையில் நெருப்பை அணைப்பதற்குப் போராடிக் கொண்டிருந்த தீயணைப்பு வீரர்களுக்கு உணவு சமைக்கச் சென்று விட்டார்கள்.

நூர் சலசபில்லா முகம்மட் பக்ருல் கைர்,16, அவரின் தங்கை நூர் அயின் சுமய்யா,13, இருவரும் பந்திங் ஜாலான் உத்தாமா கம்போங் இண்டாவில் தனியாக இருந்தனர். பின்னிரவு மணி வாக்கில் வீட்டில் தீப் பற்றிக்கொண்டது.

தீயில் தனியாகச் சிக்கிக்கொண்ட அவ்விருவரும் தீயில் சிக்கிக்கொண்டு கருகி மாண்டதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குனர் ஹஃபிஷாம் முகம்மட் நூர் கூறினார்.

“பெற்றோர் இருவரும் போர்ட் கிள்ளானில் பூலாவ் இண்டா தொழிலியல் பூங்காவில் இராசன ஆலையில் பற்றிக்கொண்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்களுக்கு உணவு தயாரிக்க உதவச் செண்டிருந்ததால் அவ்விருவரும் தனியே இருந்தனர்.

“அது பலகை வீடு என்பதால் தீ விரைவாக பரவி விட்டது. ஆனாலும், 10 நிமிடத்தில் அதை நாங்கள் முற்றாக அடக்கி விட்டோம்”, என்றாரவர்.

தீப்பற்றிக்கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. சகோதரிகளின் உடல்கள் பந்திங் மருத்துவ மனைக்கு அனுப்பப்பட்டன.