ஹாலிவூட் தயாரிப்பாளரான ஜோய் மெக்பார்லண்ட் முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் மாற்றான் மகன் ரிஸா அசிஸ் தனக்குக் கொடுத்த பல அன்பளிப்புகளை- அவை 1எம்டிபி பணத்தில் வாங்கப்பட்டவை என்பதால்- அமெரிக்க அரசிடம் ஒப்படைத்து விட்டாராம்.
ஒரு அரிய பிரெஞ்ச் நாட்டு “கிங் கோங்” போஸ்டர், Jean-Michel Basquiat-டின் ஓவியம் ஒன்று சில ஆடம்பரக் கடிகாரங்கள் ஆகியவை அன்பளிப்புகளில் அடங்கியிருந்ததாக புளும்பெர்க் செய்தி கூறியது.
அன்பளிப்புகளின் பெறுமதி குறிப்பிடப்படவில்லை ஆனால், அசிஸ் யுஎஸ்$5.4 மில்லியன் செலவிட்டு அரிய வகை போஸ்டர்களை வாங்கினார் என அமெரிக்க நீதித் துறை (டிஓஜே) கூறியது. அப்படி வாங்கியவற்றை அவர் மெக்பார்லண்ட், நடிகர் லியோனார்டோ டிகெப்ரி, இயக்குனர் மார்டின் ஸ்கோர்சிஸ் ஆகியோருக்குக் கொடுத்தாராம்.
மெக்பார்லண்ட்டும் ரிஸா அசிசும் சேர்ந்துதான் ரெட் கிரேனைட் பிக்சர்ஸ் பட நிறுவனத்தை நிறுவினார்கள். அது “த வுல்வ் அப் வால் ஸ்திரிட் ” படத்தைத் தயாரித்தது.
1எம்டிபி-இல் திருடப்பட்ட பணத்தைக் கொண்டு ரெட் கிரேனைட் அப்படத்தைத் தயாரித்ததாக டிஓஜே கூறுகிறது.