எம்ஏசிசி ஊழலற்ற நிறுவனமாக விளங்கும்- லத்தீபா உத்தரவாதம்

மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி)த் தலைவர் லத்தீபா கோயா எம்ஏசிசி அதிகாரிகள் ஊழலற்றவர்களாக இருப்பதை உறுதிப்படுத்த உறுதிபூண்டிருப்பதாகக் கூறினார்.

“எம்ஏசிசி-யை ஊழலற்ற நிறுவனமாகத் திகழச் செய்வதே எங்களை எதிர்நோக்கும் மிகப் பெரிய சவால்”, என்று எம்ஏசிசி தலைவராகவுள்ள முதலாவது பெண்மணியான லத்திபா அண்மையில் பெர்னாமாவுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டார்.

ஜூன் 4-இல் அப்பதவியை ஏற்ற லத்தீபா, எம்ஏசிசி அதிகாரிகளும் அதன் பணியாளர்களும் ஊழலால் பாதிக்கப்படாதிருப்பதை உறுதிப்படுத்தப் போவதாக சொன்னார்.

“அப்படி (எம்ஏசிசி அதிகாரிகளும் பணியாளர்களும் ஊழலில் ஈடுபடுவதாக) புகார்கள் கிடைக்குமானால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டேன்”, என்றாரவர்.