ஆபாச காணொளி உண்மையானதே ஆனால் அதில் உள்ளவர்களின் அடையாளம்தான் தெரியவில்லை-ஐஜிபி

பொருளாதார அமைச்சர் முகம்மட் அஸ்மின் சம்பட்டதாகக் கூறப்படும் பாலியல் காணொளி இருக்கிறதே அது உண்மையானதுதான் என்று சைபர்சிக்கியூரிட்டி மலேசியா உறுதிப்படுத்தியுள்ளது என இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் அப்துல் ஹமிட் படோர் கூறினார்.

ஆனால், அதில் பாலியல் செயல்களில் ஈடுபடும் ஆடவர்களைத்தான் அந்நிறுவனத்தால் அடையாளம் காண முடியவில்லை.

ஆர்டிஎம் தொலைக்காட்சியில் பிச்சாரா போலிட்கொனோமி நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது அப்துல் ஹமிட் இதனைத் தெரிவித்தார்.

“எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால் சைபர்சிக்கியூரிட்டிக்கு அனுப்பி வைத்தோம்.

“அவர்கள் காணொளி உண்மைதான் என்றார்கள். ஆனால், அதில் இருப்பவர்களைத் துல்லியமாக அடையாளம் சொல்ல முடியவில்லை என்றார்கள்.

“ஐஜிபி என்ற முறையில் நான் வெறுமனே எதையும் சொல்லி வைக்க முடியாது. நாளை விவகாரம் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்டால் அது ஒரு வாதப் பொருளாகி விடும்”, என்று போலீஸ் படைத் தலைவர் கூறினார்.

இன்று பிற்பகல் ஐஜிபி-இடம் அக்காணொளி பற்றி மேலும் வினவியதற்கு பின்னர் அறிக்கை விடுவதாகக் கூறினார்.