பிரதமராவதற்குப் போதுமான ஆதரவு உண்டு -அன்வார்

பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தாம் பிரதமராவதற்கு துணைத் தலைவர் அஸ்மின் அலி போட்டியாக இருப்பார் என்று கூறப்படுவதை நிராகரித்தார்.

பிகேஆர் எம்பிகள், பக்கத்தான் ஹரப்பான், பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் ஆகியோரின் ஆதரவு தமக்கு இருப்பதாக அன்வார் சொன்னார்.

“அப்படி இருக்க பிரச்னை என்ன?”. இன்று காலை செய்தியாளர்கள் தம்மைச் சூழ்ந்துகொண்டு ஆபாச காணொளி விவகாரத்தில் அஸ்மின் பதவி விலக வேண்டும் என்று கூறுவது அவர் பிரதமர் பதவிக்குப் போட்டியாக இருப்பார் என்பதால்தானா என்று வினவியபோது அன்வார் இப்படித் திருப்பிக் கேட்டார்.

“இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்…….நாடாளுமன்ற உறுப்பினர்கள் என் பக்கம் உள்ளனர். ஹரப்பானின் (யார் அடுத்த பிரதமர் என்ற) நிலைப்பாட்டிலும் மாற்றம் இல்லை . பிரதமரை ஒவ்வொரு வாரமும் சந்தித்துப் பேசுகிறேன்”, என்றாரவர்.