பிகேஆர் தலைவர்கள் எம்பிகள் அஸ்மினுக்கு ஆதரவு; அன்வார் கட்சியைப் பிளவுபடுத்துவதை நிறுத்தக் கோரிக்கை

14 எம்பிகள் உள்பட பிகேஆர் தலைவர்கள் 26 பேர் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் கட்சியைப் பிளவுபடுத்தும் வகையில் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

இன்று காலை கூட்டறிக்கை ஒன்றை விடுத்துள்ள அவர்கள், கட்சித் தலைவரான அன்வார் பிகேஆருக்காகவும் பக்கத்தான் ஹரப்பானுக்காகவும் நாட்டுக்காகவும் எல்லா உறுப்பினர்களையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

அதே வேளை ஆபாச காணொளியுடன் இணைத்துப் பேசப்படும் பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலிக்குத்தான் தங்கள் ஆதரவு என்றும் அவர்கள் கூறினர்.

“அஸ்மினுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ளதைப் போன்ற சாக்கடை அரசியலைக் கட்சி உறுதியாக எதிர்க்க வேண்டும்.

“நாங்கள் அஸ்மினுக்கும் அவரைப் போல் முறைகேடான தாக்குதலுக்கு ஆளாகும் தலைவர்களுக்கும் பக்கபலமாக நிற்போம்.

“கட்சித் தலைவரான அன்வார் பிளவுபடுத்தும் அறிக்கை விடுவதை நிறுத்த வேண்டும்.

“அதற்குப் பதிலாக, உறுப்பினர்களுக்காகவும் ஹரப்பானுக்காகவும் நாட்டுக்காகவும் கட்சியை ஒன்றிணைக்கப் பாடுபடுமாறு கேட்டுக்கொள்கிறோம்”, என்றவர்கள் கூறினார்கள்..