மசீச தலைமைச் செயலாளர் பதவி விலகல்

சியு மெ பன் மசீச தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து விலகினார்.

சியு ஜூலை 13-இல் பணிவிலகல் கடிதம் கொடுத்ததாகவும் இன்றிலிருந்து அது நடப்புக்கு வருவதாகவும் மசீச தலைவர் வீ கா சியோங் கூறினார்.

சீனாவின் பீக்கிங் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப் படிப்புப் பயில சியு செல்வதாக வீ தெரிவித்தார்.

“கடந்த எட்டு மாதங்களாக மெ பன் கட்சிக்கு ஆற்றிய பணிகளுக்காக மத்திய செயல்குழு சார்பாகவும் கட்சி உறுப்பினர்கள் சார்பிலும் அவருக்கு நன்றி நவில்கிறேன்”, என வீ கூறினார்.

கடந்த பொதுத் தேர்தல் தோல்வியை அடுத்து மசீச-வின் மீட்சிக்கு சியு பாடுபட்டு வந்திருப்பதாக அவர் சொன்னார்.

மசீசவுக்குப் புத்துயிர் அளிப்பதற்கான செயல்திட்டம் வரைந்தவர்களில் அவரும் ஒருவர் என்றார்.