அம்பிகா: அரசாங்கம் பெர்சே-க்கு நிதியுதவி செய்ய வேண்டும், நிபந்தனை கூடாது

தேர்தல் சீரமைப்புக்குப் போராடும் அரசுசார்பற்ற அமைப்பான பெர்சே-க்கு அரசாங்கம் மான்யம் வழங்கி உதவிட வேண்டும் என்று முன்னாள் பெர்சே தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன் வலியுறுத்தினார்.

“தேர்தல் கண்காணிப்பு என்ற வகையில் அவர்கள் நிறைய வேலை செய்கிறார்கள்.

“என்னைக் கேட்டால் அரசாங்கம் பெர்சே-க்கு நிதியுதவி அளிக்க வேண்டிய தருணம் வந்து விட்டது என்பேன். அது முழு அளவிலான நிதியுதவியாக இருக்க வேண்டும் என்பதில்லை”.
நேற்றிரவு அம்பிகா பெட்டாலிங் ஜெயாவில் பெர்சே நிதிதிரட்டு நிகழ்வு ஒன்றில் உரையாற்றினார்.

அரசாங்கம் நிதியுதவி செய்யும்போது நிபந்தனைகள் எதையும் விதிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.