தகவல் இருந்தால் போலீசிடம் கொடுங்கள்: அஸ்மின், மற்றும் அமிருடினுக்கு வான் அசிசா அறிவுறுத்து

பொருளாதார அமைச்சர் முகம்மட் அஸ்மின் அலியிடமும் சிலாங்கூர் மந்திரி புசார் அமிருடின் ஷாரியிடமும் பாலியல் காணொளி பற்றிய தகவல்கள் இருக்குமானால் அவற்றைப் போலீசுக்குத் தெரிவிக்க வேண்டும்.

இருவரும் அக்காணொளிக்குப் பின்னணியில் இருப்பது யார் என்பது தங்களுக்குத் தெரியும் என்று கூறியிருப்பதை அடுத்து துணைப் பிரதமர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் இவ்வாறு வலியுறுத்தினார்.

“அவரும் (அஸ்மினும்) சிலாங்கூர் மந்திரி புசாரும் போலீசுடன் ஒத்துழைப்பது நல்லது.

“போலீஸ் விசாரணைக்கு உதவக் கூடிய தகவல்கள் அவர்களிடம் இருப்பதாக தெரிகிறது”, என்று வான் அசிசா கூறியதாக உத்துசான் ஆன்லைன் நேற்றிரவு அறிவித்திருந்தது.