ஹசிக் மற்றும் அன்வாரின் உதவியாளர் இன்று பிற்பகல் விடுவிக்கப்படுவார்கள்

பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமின் அரசியல் செயலாளர் பார்ஹாஷ் வாஃவா செல்வடோரும், ஹசிக் அப்துல்லா அப்துல் ஹசிசும் இன்று பிற்பகல் போலீஸ் பிணையில் விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

பார்ஹாஷும் ஹசிக்கும் வேறு சிலரும் அமைச்சர் ஒருவரைச் சம்பந்தப்படுத்தும் பாலியல் காணொளி தொடர்பில் ஜூலை 16-இல் தடுத்து வைக்கப்பட்டனர்.

பார்ஹாஷ் அன்வாரின் அரசியல் செயலாளர் என்பதுடன் பேராக் பிகேஆர் தலைவருமாவார்.

ஹசிக் முன்னாள் சந்துபோங் பிகேஆர் தலைவர். பாலியல் காணொளியின்  நாயகனே   இவர்தான்.  காணொளியில் இருப்பது தானே என்று கூறி நாட்டையே அதிர வைத்தவர்  அவர்.  அத்துடன் காணொளியில் இருக்கும் இன்னொரு ஆடவர் பொருளாதார அமைச்சர் முகம்மட் அஸ்மின் அலி என்று கூறி இன்னொரு குண்டையும் போட்டார். ஆனால், அஸ்மின் அதை மறுக்கிறார்.