அடிப் மரண விசாரணை முடிவுக்கு வந்தது

ஐந்து மாதங்களாக நடந்துவந்த தீயணைப்பு வீரர் முகம்மட் அடிப் முகம்மட் காசிமின் மரண விசாரணையை ஷா ஆலம் கொரோனர் நீதிமன்றம் முடித்துக் கொண்டிருக்கிறது.

போதுமான சாட்சியங்கள் கிடைத்து விட்டதால் மேலும் சாட்சிகளை அழைக்க வேண்டியதில்லை என்ற முடிவுக்கு கொரோனர் ரோபியா முகம்மட் வந்தார்.

அடிப் மரணம் தொடர்பில் சர்ச்சை மூண்டதை அடுத்து அவரது மரணத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அடிப், நவம்பர் 27-இல் சீபீல்ட் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்துக்கு அனுப்பப்பட்ட தீ அணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்களில் ஒருவராவார். சீ பீல்ட் ஆலயத்தில் கலவரம் மூண்டதில் சில கார்களுக்குத் தீ வைக்கப்பட்டதை அடுத்து தீயை அணைப்பதற்காக அவர்கள் அங்கு அனுப்பப்பட்டனர்.
அக்கலவரத்தில் அடிப் படுகாயமடைந்தார். டிசம்பர் 17-இல் அவர் தேசிய இருதய சிகிச்சை மையத்தில் (ஐஜேஎன்) சிகிச்சை பலனின்றி இறந்தார்.

அவரது மரணத்துக்கான காரணத்தைக் கண்டறிய பிப்ரவரி 11-இல் விசாரணை தொடங்கியது. 41 நாள் விசாரணை நடந்தது. சாட்சிகள், நிபுணர்கள் என 30 பேர் சாட்சியம் அளிக்க அழைக்கப்பட்டனர்.