நஜிப்பின் எஸ்ஆர்சி வழக்கு தள்ளிவைக்கப்பட்டது

இன்று கோலாலும்பூர் உயர் நீதிமன்றத்தில் 43 நாளாக நடக்கவிருந்த முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்மீதான எஸ்ஆர்சி வழக்கு விசாரணை எதிர்த்தரப்பு வழக்குரைஞரின் உடல்நலன் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

வழக்குரைஞர் ஹர்விந்தர்ஜிட் சிங்க்குக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டு விட்டது என்று கூறி விசாரணையைத் தள்ளிவைக்க எதிர்த்தரப்பினர் கேட்டுக்கொண்டனர். அரசுத் தரப்பு அதற்கு ஆட்சேபனை தெரிவிக்காத்தால் நீதிபதி முகம்மட் நஸ்லான் முகம்மட் கசாலியும் விசாரணையை நாளைக் காலைவரை தள்ளிவைப்பதாகக் கூறினார்.

ஆனால் நாளை வேறொரு வழக்குரைஞரை வைத்தாவது அம்பேங்க் முன்னாள் அதிகாரி ஜோனா யு கிங் பிங்கைக் குறுக்கு விசாரணை செய்ய தயாராக இருக்க வேண்டும்.

அது முடியவில்லை என்றால் அரசுத்தரப்பு இன்னொரு சாட்சியைக் கொண்டு விசாரணையைத் தொடர வேண்டும் என்றார்.