லியு: ரிம28 ஆயிரம் கடிகாரம் அமைச்சரின் உதவியாளர் வாங்கியது; பரிசாகக் கொடுக்கப்பட்டதல்ல

விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் அமைச்சர் சலாஹுடின் ஆயுப்பின் உதவியாளர் ஒரு மேம்பாட்டாளரிடமிருந்து ஆடம்பர கடிகாரம் ஒன்றைக் கையூட்டாக பெற்றார் என்று கூறப்பட்டது தவறு என்பதால்தான் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) அவரை விடுவித்தது என சட்ட விவகார அமைச்சர் லியு வூய் கியோங் கூறினார்.

அந்த 47வயது உதவியாளர் ரிம28,000 கடிகாரத்தைப் பணம் கொடுத்து வாங்கியுள்ளார்.

“பணம் எங்கிருந்து வந்தது என்பதை அவர் விளக்கினார். அதில் திருப்தியுற்ற எம்ஏசிசி அவரை விடுவித்தது”, என லியு மேலவையில் கேள்வி நேரத்தின்போது கூறினார்.