துருக்கி “வான்வெளி, தற்காப்புத் தொழில்துறைகளில்” தொழில்நுட்பத்தை மாற்றிவிட தயாராக இருப்பதை மலேசியா வரவேற்கிறது என்றும் அப்படிப்பட்ட வாய்ப்புகளை விட்டுவிடக் கூடாது என்றும் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார்.
துருக்கி குறுகிய காலத்தில் “வான்வெளித் தொழில்களில்” வியத்தகு முன்னேற்றத்தைக் கண்டிருப்பது தலைசிறந்த சாதனையாகும் எனப் பிரதமர் குறிப்பிட்டார்.
“இங்கு விமானங்கள், ஹெலிகாப்டர்கள், யுஏவி (ஆளில்லா பறக்கும் ஊர்திகள்) போன்றவற்றில் அவர்களின் தொழில்நுட்பத் திறன்கள் எனக்குக் காண்பிக்கப்பட்டன. 20 ஆண்டுகளுக்குமுன் நான் இங்கு (துருக்கி) வந்தபோது எப்-16 விமானங்களைப் பூட்டுவதற்கு மட்டுமே அவர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள்.
“இப்போது சொந்த பொருள்களை வடிவமைக்கிறார்கள், சோதனை செய்கிறார்கள். அவர்களின் ஹெலிகாப்டர்கள் மிக நவீனமாக உள்ளன. குறுகிய காலத்தில் நவீன தொழிநுட்பத்தைப் பெறுவதில் வெற்றி கண்டிருக்கிறார்கள்”, என்று மகாதிர் நேற்று இஸ்தான்புல்லில் மலேசிய செய்தியாளர்களிடம் கூறினார்.