செப்டம்பரில் கையெழுத்தாகவுள்ள அம்னோ-பாஸ் ஒத்துழைப்புச் சாசனம் மதினா அரசமைப்பை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என அம்னோ தலைமைச் செயலாளர் அனுவார் மூசா இன்று கூறினார்.
அது குறித்து முஸ்லிம்-அல்லாதார் அச்சம் கொள்ளத் தேவையில்லை ஏனென்றால் மதினா அரசமைப்பு அவர்களின் நலனையும் பாதுகாக்கிறது என்றவர் தெரிவித்தார். மதினா அரசமைப்பு என்பது நபிகள் நாயகத்துக்காக 662ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட அரசமைப்பு.
அது உருவாக்கப்பட்ட காலத்தை வைத்துப் பார்க்கையில் அதுவே உலகில் எழுத்து வடிவில் உருவாக்கப்பட்ட முதல் அரசமைப்புச் சட்டமாகும் என்றும் அவர் சொன்னார்.
“பாஸுடன் கையெழுத்திடப்படும் சாசனமானது, நாட்டில் உள்ள முஸ்லிம்களை ஒன்றினைக்கும் முயற்சியின் தொடக்கமாக அமையும், அதேவேளை நாட்டின் பல்வகைமையும் மறக்கப்படாது”, என்று அனுவார் தெரிவித்ததாக சினார் ஹரியான் கூறியது.