குடியுரிமை விண்ணப்பங்களின் பரிசீலனை சீராக்கப்படும்

குடியுரிமைக்குச் செய்யப்படும் விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் நடைமுறைகள் சீராக்கப்பட விருப்பதாக உள்துறை அமைச்சர் முகைதின் யாசின் கூறினார். இந்தப் புதிய நடைமுறை ஒவ்வொரு விண்ணப்பமும் கவனமாக, நியாயமாக, விரைவாக பரிசீலிக்கப்படுவதை உறுதிப்படுத்தும்.

“நீண்ட காலமாகக் குடியுரிமை இல்லாதிருப்போர் எதிர்நோக்கும் சிக்கல்களை நான் முழுமையாக அறிவேன்”, என்று அமைச்சர் கூறினார்.

இப்புதிய நடைமுறைகள் குடியுரிமைக்குக் காத்திருக்கும் காலத்தை மூன்றாண்டுகளிலிருந்து ஓர் ஆண்டாகக் குறைக்கும்.