இன்று புதிய யாங் டி பெர்துவான் ஆகோங்காக அரியணை அமர்ந்த அல்-சுல்தான் ரி’ஆதுடின் பில்லா ஷா, மக்கள் நாட்டின் நல்லிணக்கத்தைக் கெடுக்கும் விவகாரங்களைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஒற்றுமையும் நல்லிணக்கமும்தான் நாட்டின் வலிமை; நாட்டைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் தூண்கள் என்று மாமன்னர் கூறினார்.
“நெருப்புடன் விளையாடினால் அது தன்னைச் சுடுவதோடு கிராமம் முழுவதையுமே எரித்து விடும்”, என்று 16வது பேரரசராக அரியணை அமர்ந்த சுல்தான் அப்துல்லா கூறினார்.