காலணிகளை மாற்றிக்கொள்வதுபோல் பிரதமரை மாற்றிக்கொள்ள முடியாது- ஹாடி

பிரதமரை அவசரப்பட்டு மாற்றிக்கொள்ளக் கூடாது, அப்படி மாற்றுவது எளிதல்ல என்கிறார் பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங். டாக்டர் மகாதிர் முகம்மட் ஐந்தாண்டுக் காலத்துக்கு முழுமையாக இருக்க அனுமதிக்க வேண்டும் என்றாரவர்.

பாதி வழியில் அவரை மாற்றுவது நல்லதல்ல.

“பிரதமர் பதவி என்பது காலணி அணிவது போன்றதல்ல, நினைத்த நேரத்தில் மாற்றிக்கொள்ள. எல்லாம் ஒரு நிலைக்கு வரும்வரை அப்படியே இருக்கட்டும்.

“:அவருக்கு (மகாதிருக்கு) அனுபவம் உண்டு. அவர் நீண்டகாலம் பிரதமராக பணியாற்றியவர். அவருக்கு வாய்ப்பு கொடுப்போம். முடிகிறவரை செய்யட்டும்”, என ஹாடி தெரிவித்தாக உத்துசான் ஆன்லைன் கூறுகிறது.