உங்கள் கருத்து: ஜாகிர் நாய்க்கை மற்ற நாடுகள் வேண்டாம் என்பது ஏன் என்று மகாதிர் எண்ணிப்பார்த்தாரா?

அவரை வைத்துக்கொள்ளவும் முடியவில்லை, வெளியேற்றவும் முடியவில்லை- ஜாகிர் நாய்க்கால் நேர்ந்த இக்கட்டை விவரிக்கிறார் மகாதிர்

எஸ்டி: சமயப் போதகர் ஜாகிர் நாய்க்கை வேறு எந்த நாடும் வா என்று வரவேற்கவில்லையே, அது ஏன் என்று பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் தமக்குள் கேட்டுக்கொண்டது உண்டா? மற்ற நாடுகள் அவரை விரும்பாதபோது நாம் அவரை வைத்துக்கொள்ள எந்தக் காரணமுமில்லை.

இந்தியா அவரைத் தேடுவது பிரதமருக்குத் தெரியும். அவரைத் திருப்பி அனுப்ப மறுக்கிறார். அதற்கு மகாதிர் அளித்த விளக்கம் அரசாங்கம் அவரைப் பாதுகாக்க விரும்புவதைத் தெளிவாகக் காட்டுகிறது.

பக்கத்தான் ஹரப்பானில் உள்ள முஸ்லிம்-அல்லாத அமைச்சர்கள் இதையெல்லாம் பார்த்துக்கொண்டு வாய்மூடி மெளனிகளாக இருப்பதுதான் அதிர்ச்சி அளிக்கிறது. முந்தைய ஆட்சியில் கத்திக் கூச்சல் போட்டவர்கள் இப்போது வாயை மூடிக் கொண்டிருப்பது பதவியைக் காக்கவும் பணத்துக்காகவும்தானா!

ஃப்ரெட்டான்: சொன்னது மகாதிர்தானா? அவரின் குளோனா( clone)?

எதற்கு அஞ்சாதவர், யாரும் அடியெடுத்து வைக்கத் துணியாத இடங்களில் எல்லாம் துணிந்து கால் வைப்பவர் என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தோம்.

நீங்கள்தான் சொல்கிறீர்கள், எந்த நாடும் அவரை விரும்பவில்லை என்று அப்படியானால் நாம் ஏன் அவரை விடாப்பிடியாக வைத்துக்கொள்ள வேண்டும். அவரை வைத்துக்கொள்ள வேண்டும் என்ற கடப்பாடு எதுவும் மலேசியாவுக்கு இல்லையே. அவர் என்ன மலேசியாவில் பிறந்த குடிமகனா, பாதுகாப்பதற்கு?

அவரை 100 விழுக்காடு முஸ்லிம்கள் வாழும் சவூதி அராபியா போன்ற நாட்டுக்கு அனுப்புங்கள். முடியாதே. அவர்களும் வேண்டாம் என்கிறார்களே.

Wg321: ஜாகிரை சவூதி அராபியாவுக்கு அனுப்பலாம். 2017-இல், மன்னர் சல்மான் அப்துல் அசீஸ் அல் சவூத், ஜாகிருக்கு சவூதி அராபியா குடியுரிமை கொடுத்தார். எனவே, அவரை எந்த நாடும் விரும்பவில்லை என்று மகாதிர் கூறுவதில் உண்மை இல்லை.

வயதானவன்: மகாதிர் சொல்வது எனக்குப் புரியவில்லை. மற்றவர்கள் வேண்டாம் என்று கூறும் ஒருவரை நாம் மட்டும் ஏன் வைத்துக்கொள்ள வேண்டும்?

கீ துவான் சை: மகாதிர் உளறுகிறார். அவரை இந்தியாவுக்கு அனுப்பலாம். அவரை அனுப்பி வைக்கும்படி இந்திய அரசாங்கமும் கேட்டுக்கொண்டுள்ளது. அதை மதிக்க வேண்டும்.

அவர்மீது நியாயமான விசாரணை நடக்குமா என்பது நமக்குத் தேவையில்லாத விசயம். பல்லினங்களையும் பல சமயங்களையும் கொண்ட நம் நாடு நன்றாக இருப்பதே நமக்கு முக்கியம்.

பார்வையாளன்: ஜாகிர் இந்திய குடிமகன். இந்தியாவே அவருக்கு உரிய இடம். அங்கு அவர் குற்றச்சாட்டுகளையும் எதிர்நோக்குகிறார்.

முகம்மட் இஸ்னின்: நியாயம் கிடைக்காது அது இதுவென்று கூறுவதெல்லாம் சும்மா. மகாதிருக்கு அவருடைய பதவியைக் காக்க வேண்டும், வாக்கு வங்கியைக் காக்க வேண்டும்- அதுதான் முக்கியம். அதற்காக பயங்கரவாதியாக இருந்தாலும் அடைக்கலம் கொடுக்க தயங்க மாட்டார்.

ஜெப்பர்சன்: என்ன ஆனது மலேசியாவுக்கு? உலகின் குப்பை மேடாக மாறிவிட்டதா?

நெகிழி (பிளாஸ்டிக்)க் கழிவுகளைக் கொண்டு வந்து கொட்டுகிறார்கள். லைனாஸ் போன்றவை நச்சுக் கழிவுகளைக் கொட்டுகின்றன. இப்போது விஷத் தன்மை வாய்ந்த மனிதர்கள்.

மனோ: யார் இந்த ஜாகிர் நாய்க்? மன எழுச்சி ஊட்டக்கூடியவராம். பிரதமர்துறை அமைச்சர் யூசுப் ரவா கூறுவார். அமைச்சரை நல்ல சிந்தானையாளர் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

பெயரிலி 6329: சட்டத்துக்குத் தப்பி ஓடிய தொழிலதிபர் லோ தெக் ஜோவை எந்த நியாயமான காரணத்தைச் சொல்லித் திரும்ப கொண்டு வரப்போகிறோம். ஒரு முக்கியமான சாட்சி இல்லை. எனவே, 1எம்டிபி வழக்குக்கு இனி நீதிமன்றத்திலேயே சமாதிதான்.

தடித்ததோல்: ஓராங் அஸ்லிகளுக்குப் பாதுகாப்பு இல்லை, ஒரு வெளிநாட்டவரைப் பாதுகாப்பது ஏன்?.