ஜோகூர் பாருவைச் சுற்றியுள்ள வட்டாரங்களில் 70 பேருக்குக் காச நோய் கண்டிருப்பதாக வலைத்தளங்களில் பரவிவருவது பொய்யான செய்தி என்று ஜோகூர் சுகாதார இயக்குனர் டாக்டர் சலேஹுடின் அப்ட் அசீஸ் கூறினார்.
அப்பகுதியில் 2019 ஜனவரியிலிருந்து ஜூலை வரை அப்பகுதியில் 10 பேருக்கு மட்டுமே அந்நோய் கண்டிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு, அணுக்கமாகக் கண்காணிக்கப்படுகிறது.
“ஜோகூர் மாநில சுகாதாரத் துறை காச நோய் காரணமாகவோ வேறு தொற்று நோய்கள் காரணமாகவோ பயணக் கட்டுப்பாடு எதையும் விதிக்கவில்லை என்பதையும் தெரிவித்துக்க்கொள்ள விரும்புகிறோம்”, என்றவர் ஓர் அறிக்கையில் கூறினார்.
குழப்பத்துக்கும் கலக்கத்துக்கும் வழிகோலும் என்பதால் மக்கள் பொய்யான தகவல்களைப் பரப்பக்கூடாது என்றும் டாக்டர் சலேஹுடின் அறிவுறுத்தினார்.