முன்னாள் அமைச்சர் ரயிஸ் யாத்திம், மலாய்ப் பண்பாட்டைக் காக்க வேண்டுமானால் பரவிவரும் “அராபிச(அரபு மயத்தை))த்தை” எதிர்த்துப் போராடுவது அவசியம் என்கிறார்.
பலர் அரபுக்களையும் இஸ்லாத்தையும் வேறுபடுத்திப் பார்க்கத் துணிய மாட்டார்கள் ஆனால், அரபு வட்டாரம் மலாய்த் தீவகற்பத்தைவிட எந்த வகையிலும் சிறந்ததன்று என்று ரயிஸ் கூறியதாக ஃப்ரி மலேசியா டுடே அறிவித்திருந்தது.
“இப்போது சவூதி அராபியா ஏமன் மக்களைக் கொன்று குவிக்கிறது. இது இஸ்லாமியப் பண்பாடா? யார் யாருக்கு முன்னுதாரணம்? என்னைக் கேட்டால் மலேசியாவும் இந்தோனேசியாவும் உலகுக்கு நல்ல முன்னுதாரணமாக திகழ முடியும் என்பேன்” என்றார்.
மலாய்ப் பண்பாட்டைக் கட்டிக் காத்துக்கொண்டு இஸ்லாமிய மயத்துக்கு இடமளிக்கலாம், ஆனால் அரபு மயம் ஊடுருவ இடமளிக்கக் கூடாது என பெர்சத்துக் கட்சி உச்சமன்ற உறுப்பினரான ரயிஸ் கூறினார்.