முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடமிருந்து இன்னும் செலுத்தப்படாமல் இருக்கும் ரிம1.69 மில்லியன் வருமான வரியை வசூலிக்க புத்ரா ஜெயா முயன்று வரும் வேளையில் அவரின் புதல்வர் முகம்மட் நஸிபுடின் முகம்மட் நஜிப்மீது ரிம37.6 மில்லியன் வரி செலுத்துமாறு உள்நாட்டு வருமான வாரியம் வழக்கு தொடுத்துள்ளது.
நஸிபுடின் 2011, 2012, 2013, 2014, 2015, 2016 , 2017 ஆகிய ஆண்டுகளுக்கு வருமான வரியாக ரிம1,541,850.83, ரிம 5,718,486.42, ரிம5,437,086.08, ரிம3,775,133.23, ரிம 1,796,494.18, ரிம2,271,812.79-உம் அத்துடன் கூடுதல் மதிப்பீட்டு வரியாக ரிம12,052,046.26-உம் செலுத்தத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வருமான வரி மதிப்பீட்டு அறிவிக்கை கிடைத்த 30 நாள்களில் வரியைச் செலுத்தத் தவறியதற்காக 10 விழுக்காடு அபராதம் விதிக்கப்படுகிறது.
எதிர்வாதி 60 நாள்களில் வரியைக் கட்டத் தவறியதால் மேலும் 5 விழுக்காடு அபராதம் ஆக மொத்தம் அவர் ரிம37,644,810.73 வரி செலுத்தியாக வேண்டும்.