புகை மூட்டப் பிரச்னைக்கு எதிராக உறுதியான நடவடிக்கை தேவை- சமூக ஆர்வலர்

ஆசியான் நாடுகள் இவ்வட்டார மக்களின் சுகாதாத்தையும் நல்வாழ்வையும் பாதிக்கும் புகைமூட்டப் பிரச்னைக்கு ஒன்றுகூடி முடிவு காண வேண்டும் என்கிறார் பிரபல சமூக ஆரவலர் ஆங் லாய் சூன்.

திரும்பத் திரும்ப வந்து மிரட்டும் இப்பிரச்னையை ஆசியான் நாடுகள் கடுமையான ஒன்றாகக் கருத வேண்டும். இதன் தொடர்பில் கடந்த ஆண்டுகளில் அவை சந்தித்துப் பேசியிருந்தாலும் எடுத்த நடவடிக்கைகள் பலன் அளித்துருப்பதுபோல் தெரியவில்லை என்றாரவர்.

“சம்பந்தப்பட்ட ஆசியான் நாடுகள் கண்டிப்பாக சந்தித்துப் பேசத்தான் வேண்டும். ஆனால், அச்சந்திப்பில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். திரும்பத் திரும்ப வரும் இப்பிரச்னைக்கு முற்றாக ஒரு தீர்வு காணப்பட வேண்டும்”, என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.