சிலாங்கூர் மாநிலத்தில் ஒருதலைப்பட்ச மதமாற்றுக்கு இடமளிக்கும் சட்டவரைவை சிலாங்கூர் சுல்தான் மறு ஆய்வு செய்வதாக மந்திரி புசார் அமிருடின் ஷாரி கூறினார்.
அந்த மறு ஆய்வுக்குப் பின்னரே அந்தச் சட்டவரைவை மாநிலச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்வதா வேண்டாமா என்று முடிவு செய்யப்படும் என்று அவர் இன்று காலை ஷா ஆலமில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இது கூட்டரசு அரசமைப்பு சம்பந்தப்பட்ட ஒரு விவகாரம் என்பதால் இதை முழு அளவில் பரிசீலிப்பது முக்கியம் என்றாரவர். இதன் தொடர்பில் சிலாங்கூர் மற்றும் கூட்டரசுத் தலைவர்களுடன் கலந்துரையாடப்போவதாக மந்திரி புசார் கூறினார்.

























