ஏடிஎம் இயந்திரங்கள் தகர்ப்பு: ரிம300,000 களவாடப்பட்டது

இன்று தஞ்சோங் மாலிம், ஜாலான் ஹாஜி முஸ்டபா ராஜா கமலாவில் ஒரு வங்கியின் மூன்று ஏடிஎம் இயந்திரங்களைக் கொள்ளையர்கள் வெடிவைத்துத் தகர்த்தனர். பின்னர், அவற்றில் ஒன்றில் மட்டும் இருந்த ரிம300,000 -த்தை எடுத்துக் கொண்டு தப்பினர்.

அச்சம்பவம் இன்று காலை மணி 6.30க்கு நிகழ்ந்ததாக தஞ்சோங் மாலிம் போலீஸ் தலைவர் சூப்பிரெண்டெண்ட் வான் கம்ருல் அஸ்ரான் வான் யூசுப் தெரிவித்தார்.

நேற்று மாலைதான் அந்த இயந்திரத்தில் ரிம300,000-த்தை வங்கி அதில் நிரப்பி வைத்திருந்ததாம்.