பல விவகாரங்கள் மீதும் கருத்துரைக்கப்படுகிறது என்று கூறிய சுங்கை பீலேக் சட்டமன்ற உறுப்பினர் ரோனி லியு, நாட்டு நான்மைக்காகத்தான் அப்படிப்பட்ட “ஆக்ககரமான” கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன என்கிறார்.
எனவே, தன்னையோ கிள்ளான் எம்பி சார்ல்ஸ் சநிதியாகுவையோ பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கிண்டலடிப்பதோ நையாண்டி செய்வதோ அவசியமற்றது என்றாரவர்.
இனிமேல் அறிக்கை விடுப்பதற்குமுன் டிஏபி தலைவர்களைக் கேட்டுக்கொண்டிதான் விடுப்பேன் என்று மகாதிர் கிண்டல் செய்திருப்பது பற்றி லியு கருத்துரைத்தார்.
“இதில் அவர் கிண்டல் செய்ய எதுவுமில்லை. ஆக்கப்பூர்வமான கருத்துகளைத்தானே முன்வைத்தோம், எதற்காக, வாக்காளர்கள் விரும்பும் எதிர்பார்க்கும் ஒரு நல்ல மலேசியா வேண்டும் என்பதற்காகத்தானே”, என்று சிலாங்கூர் டிஏபி செயல்குழு உறுப்பினருமான லியு ஓர் அறிக்கையில் கூறினார்.