ஆகஸ்ட் 4-இல் சிரம்பான் பந்தாய் ஓய்வுத் தளத்திலிருந்து காணாமல்போன அயர்லாந்து சிறுமி நோரா என்னைத் தேடும் பணி இன்று பத்தாவது நாளாகத் தொடர்கிறது.
தேடும் பணியை மேர்கொண்டிருக்கும் தேடல், மீட்புக் குழுவுடன் உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகவியலாளர்களும் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
ஊடகங்கள் கூட வருவதை நீலாய் ஓசிபிடி முகம்மட் நோர் மர்சூகி ஆட்சேபிக்கவில்லை.
“ஆனால் அவர்களின் பாதுகாப்புக்கு அவர்களே பொறுப்பு”, என்றார்.
சிறுமியை தேடும் நடவடிக்கையில் நேற்று மாலை 5 மணி வரையிலும் 353 ஆள்கள் ஈடுபட்டிருந்தனர்.
பள்ளி விடுமுறையைக் கழிப்பதற்காக நோரா ஆகஸ்ட் 3-இல் தன் குடும்பத்தோடு மலேசியா வந்தார்.
ஆகஸ்ட் 4 இரவு எட்டு மணிக்கு நோரா காணாமல்போனது தெரிய வந்தது.
நேற்று அவரின் தாயார் மீப் ஜாஸ்பிரின் குவோரின்,46, நோரா திரும்பக் கிடைக்க உதவும் தகவல் தருவோருக்கு ரிம50,000 வெகுமதி அளிப்பதாக அறிவித்தார்.