அது நோரா என் உடல்தான் – நெகிரி செம்பிலான் காவல்துறை உறுதிபடுத்தியது

செவ்வாய்க்கிழமை பிற்பகல் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு வெள்ளை தோல் கொண்ட பெண்ணின் சடலம், கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி, நீலாயில் உள்ள ஒரு ரிசோர்ட்டிலிருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் நோரா என் குய்ரின், 15, உடையது.

சிரம்பான், துவான்கு ஜாஃபர் மருத்துவமனையில், அப்பெண்ணின் குடும்பத்தினரால் சடலம் அடையாளம் காணப்பட்டதாக நெகிரி செம்பிலான் மாநிலக் காவல்துறைத் தலைவர் மொஹமட் மாட் யூசோப் தெரிவித்தார்.

துவாங்கு ஜாஃபர் மருத்துவமனையின் தடயவியல் மருத்துவத் துறை, இன்று காலை 10 மணிக்குப் பிரேத பரிசோதனை தொடங்கியுள்ளது.

நேற்று மாலை 6.45 மணியளவில், சிரம்பான் கிங் ஜார்ஜ் V தேசிய உயர்நிலைப்பள்ளிக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்ட நோரா என்னின் உடல், இரவு 7.07 மணியளவில் துவாங்கு ஜாஃபர் மருத்துவமனை தடயவியல் மருத்துவ துறையை வந்து சேர்ந்தது.

இரவு 8.40 மணியளவில் ஊடகங்களின் புகைப்பட வேட்டைகளைத் தவிர்த்துகொண்டு, நோரா என்னின் குடும்ப உறுப்பினர்கள் அவசரமாக தடயவியல் துறைக்கு வந்தார்.

மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா யோ மற்றும் மாநில மகளிர் விவகாரங்கள், குடும்ப மற்றும் நலக் குழுத் தலைவர் நிக்கோல் தான் லீ கூன் ஆகியோரும் அங்கு வந்திருந்தனர்.

-பெர்னாமா