பெர்சத்துவுக்கு மாறிச் சென்ற மூன்று எம்பிகள்மீது அம்னோ வழக்கு

அம்னோ, அதன் கட்சியைச் சேர்ந்த எம்பிகள் மூவர் பெர்சத்துவுக்கு மாறிச் சென்றதை எதிர்த்து வழக்கு தொடுத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோலாலும்பூர், கோத்தா பாரு உயர் நீதிமன்றங்களில் ஜெலி எம்பி முஸ்டபா முகம்மட், ஹம்சா சைனுடின்(லாருட்), இக்மால் ஹிஷாம் அப்துல் அசீஸ் (தானா மேரா) ஆகியோர்மீது நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக த மலேசியன் இன்சைட் ஒரு வட்டாரத்தை மேற்கோள்காட்டிக் கூறியது.

முஸ்டபாவும் ஹம்சாவும் அம்னோ தலைமையிலான பாரிசான் நேசனல் பக்கத்தான் ஹரப்பானிடம் தோல்வியுறும் முன்னர் கூட்டரசு அமைச்சர்களாக இருந்தவர்கள்.