போலீஸ்: நோரா என் குடல் இரத்தப்போக்கினால் இறந்தார்

அயர்லாந்தைச் சேர்ந்த பதின்ம வயது நோரா அன் குடல் புண் காரணமாக ஏற்பட்ட இரத்தக் கசிவால் இறந்ததாக போலீஸ் கூறியது.

ஆகஸ்ட் 4-இல் காணாமல்போன நோரா என், கடந்த செவ்வாய்க்கிழமைதான் இறந்தநிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

சடலம் கண்டுபிடிப்பதற்கு இரண்டு முன்று நாள்களுக்கு முன்னதாகவே நோரா இறந்து விட்டது சவப் பரிசோதனையில் தெரிய வந்ததாக நெகிரி செம்பிலான் போலீஸ் தலைவர் முகம்மட் மாட் யூசுப் கூறினார்.

“குடல் இரத்தக் கசிவுதான் அவரது இறப்புக்குக் காரணம். நீண்ட காலம் அழுத்தத்துக்கு ஆளானதாலும் பல நாள் உணவருந்தாததாலும் குடல்புண் உண்டாகி இரத்தக் கசிவு எற்பட்டிருக்கிறது”, என்றாரவர்.