கெடா மாநிலத்திலும் ஜாகிர் நாய்க் பொதுவிடங்களில் பேசுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சமயப் போதகர் ஜாகிர் நாய்க் கெடாவுக்கு வரலாம் ஆனால், பொது நிகழ்வுகளில் பேசக்க்கூடாது என கெடா சமய விவகாரக் குழுத் தலைவர் இஸ்மாயில் சாலே கூறியதாக சினார் ஹரியான் அறிவித்துள்ளது.
“இன நல்லிணக்கத்துக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியுள்ளது. எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றக் கூடாது. நெருப்பு மேலும் மோசமாகும்.
“இருக்கும் ஒற்றுமையைக் கெடுக்க நாங்கள் விரும்பவில்லை”, என்றாரவர்.
முன்பு ஜாகிர் கெடாவில் பேசியதுண்டு எனவும் இஸ்மாயில் கூறினார்.
“ஏப்ரலில் யுனிவர்சிடி உத்த்ரா மலேசியாவில் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் பேசுவதற்கு ஜாகிர் அனுமதிக்கப்பட்டார்.
“அவரும் கொடுத்த தலைப்பில் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பேசினார்.
“ஆனால், இப்போது பேசுவதற்கு அனுமதி கேட்டால் அனுமதி கொடுக்க மாட்டோம்”, என்றாரவர்.