முன்னாள் ஐஜிபியும் ஜாகிர் நாடுகடத்தப்படுவதை விரும்புகிறார்

டாக்டர் ஜாகிர் நாய்க்கின் நிரந்தர வசிப்பிடத் தகுதி இரத்துச் செய்யப்பட்டு அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட வேண்டும் என்கிறார் முன்னாள் இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் அப்துல் ரகிம் நூர்.

சர்ச்சைக்குரிய அச்சமயப் போதகர்மீது புலன்விசாரணை நடைபெறுகிறது என்றாலும், அவரை நாடு கடத்துவதற்குப் போதுமான காரணங்கள் இருக்கின்றன என்றவர் கூறியதாக த ஸ்டார் அறிவித்துள்ளது.

விசாரணைகளில் ஜாகிர் குற்றம் புரிந்திருப்பதாக நிறுவப்பட்டால் அவரது பிஆர் தகுதியைப் பறிப்பது பற்றி அரசாங்கம் பரிசீலிக்கும் என்று பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறியிருப்பதை ரகிம் சுட்டிக்காட்டினார்.

“என்னைக் கேட்டால், அவர் சமயம் பற்றியும் மற்ற விவகாரங்கள் பற்றியும் பேசி இந்நாட்டில் உள்ள முஸ்லிம்- அல்லாதாரின், குறிப்பாக இந்துக்களின் மனத்தைப் புண்படுத்தி விட்டார்.

“புலன் விசாரணை முடிவுக்காக நாம் காத்திருக்க வேண்டியதில்லை”, என்றவர் சொன்னார்.