ஜாகிர் நாய்க் இன்று மறுபடியும் போலீசில் வாக்குமூலம் அளிப்பார்

இஸ்லாமிய சமயப் போதகர் டாக்டர் ஜாகிர் நாய்க், இரண்டாவது முறையாக வாக்குமூலம் அளிப்பதற்கு புக்கிட் அமானுக்கு அழைக்கப்பட்டிருப்பதாக சிஐடி தலைவர் ஹுசிர் முகம்மட் கூறினார்.

இன்று பிற்பகல் மணி மூன்றுக்கு அவர் புக்கிட் அமான் செல்வார். அமைதியைக் கெடுக்கும் வகையில் அவர் பேசியதாகக் கூறப்படுவது குறித்து அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படும்.

இதற்குமுன் கடந்த வெள்ளிக்கிழமை ஜாகிர் முதல் முறையாக வாக்குமூலம் அளித்தார்.

ஆகஸ்ட் 3-இல் கோத்தா பாருவில் ஒரு கூட்டத்தில் பேசிய ஜாகிர், மலேசிய இந்துக்களையும் மலேசிய சீனர்களையும் சிறுமைப்படுத்தும் வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது.

அதன் விளைவாக அவரை இந்தியாவுக்க்கு நாடு கடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

2016-இலிருந்து இந்திய அதிகாரிகள், பணச் சலவை நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகவும் பேச்சு மூலமாக பல சமயத்தாரிடையே வெறுப்பூட்டி வந்ததற்காகவும் ஜாகிரைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.