ஜாகிரின் சமய ஒப்பீட்டைவிட அறிவியல் அறிவு மேலானது- ஜைட்

சமயப் போதகர் டாக்டர் ஜாகிர் நாய்க்கின் நிரந்தர வசிப்பிடத் தகுதி சர்ச்சைக்கு இலக்காகியுள்ள வேளையில் ஜைட் இப்ராகிம் அறிவியல் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

சிலர் சமயப் போதகரின் சமய ஒப்பீட்டுப் பேச்சைப் புகழ்ந்து தள்ளியிருப்பதைச் சுட்டிக்காட்டிய முன்னாள் அமைச்சர், அது எதற்கு என்று வினவினார்.

“அது நமக்கு அவசியமா?”, என்றவர் டிவிட் செய்திருந்தார்.

அரசியலின் இரு பக்கமும் உள்ள மலாய்த் தலைவர்கள் ஒன்றுபட வேண்டும் என்பதை ஜைட் ஒப்புக்கொண்டார்.

மலாய் முஸ்லிம்களின் ஒற்றுமை கல்வியை மேம்படுத்தவும் அறிவியலை அனுசரிக்கவும் செய்வதை மேன்மையுறச் செய்யவும் ஊழலை எதிர்க்கவும் பயன்பட வேண்டும்.

“அதைக் கொண்டு பக்கத்தான் ஹரப்பானை, டிஏபியை, முற்போக்குவாதிகளைத் தாக்க முனையாதீர்கள். அது வீண் வேலை”, என்றந்த டிஏபி உறுப்பினர் கூறினார்.