பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் அமைச்சரவையை மாற்றி அமைப்பார் என்ற ஊகம் பரவலாக அடிபடுகிறது. அந்த மாற்றத்தில் முன்னாள் அனைத்துலக வாணிக, தொழில் அமைச்சர் முஸ்டபா முகம்மட் கண்டிப்பாக அமைச்சராக்கப்படுவாராம்.
அதேவேளையில், நடப்பு அமைச்சர்கள் யாரும் விலக்கப்பட மாட்டார்கள் என்றும் சில செய்திகள் கூறுகின்றன. ஆனால், அவர்களின் பொறுப்புகள் மாற்றப்படலாம்.
முஸ்டபா சேர்த்துக் கொள்ளப்பட்டால் அமைச்சரவைக்கு அனுபவம் வாய்ந்த அமைச்சர் ஒருவர் கிடைப்பார் என ஓரியெண்டல் டெய்லி கூறியது.
தோக் பா என்று அழைக்கப்படும் முஸ்டபா, 2009-இலிருந்து 2018வரை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்துள்ளார்.
ஜெலி எம்பி ஆன அவர் 14வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பெர்சத்துவில் சேர்ந்தார்.