பணிப்பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் பால் யோங், தன்மீதான வழக்கு முடியும்வரை விடுப்பில் செல்ல முடிவு செய்துள்ளார்.
விடுப்பில் செல்வது வழக்கில் கவனம் செலுத்த வசதியாக இருக்கும் என்று அந்த டிஏபி சட்டமன்ற உறுப்பினர் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
அதே வேளை தன்மீதான குற்றச்சாட்டு தனக்கு எதிராக பின்னப்படும் சூழ்ச்சிவலை என்றும் அவர் கூறிக்கொண்டார்.
“எனக்கு எதிரான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வன்மையாக மறுக்கிறேன். இது எனக்கு எதிரான ஒரு அசிங்கமான அரசியல் சூழ்ச்சி. அக்குற்றச்சாட்டு எனக்கும் என் குடும்பத்தாருக்கும் சகாக்களுக்கும் பெரும் துன்பத்தைத் தந்துள்ளது”, என்றாரவர்.