வெறுப்புப் பேச்சைக் கட்டுப்படுத்த தனிச் சட்டம் தேவை -முஜாஹிட்

இஸ்லாமிய விவகார அமைச்சர் முஜாஹிட் யூசுப் ராவா, 1948, நிந்தனைச் சட்டத்தில் வெறுப்புப் பேச்சுக்கு எதிரான விதிகளும் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்கிறார், ஆண்டு முடிவடைவதற்குள் தேசிய நல்லிணக்க மற்றும் சமரச ஆணையமும் அமைக்கப்பட வேண்டும் என்றும் விரும்புகிறார்.

“இப்போது இன, சமய வெற்ப்பூட்டும் பேச்சுகளுக்கு எதிராக பல சட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், அப்பிரச்னைமீது மட்டும் கவனம் செலுத்தும் குறிப்பான சட்டதிருத்தங்கள் தேவை.

“அரசாங்கம் வெறுப்புப் பேச்சு எதிராக சட்டம் கொண்டு வருவதற்கான நேரம் வந்து விட்டது. இனத்துக்கும் சமயத்துக்கும் எதிராக வெறுப்பூட்டும் பேச்சுகள் சர்வ சாதாரணமாகி விட்டன, சமூக ஊடகங்களைப் பாருங்கள்”, என்றவர் கூறியதாக த ஸ்டார் அறிவித்துள்ளது.