சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் என்று எவரும் இலர் என்கிறார் உள்துறை அமைச்சர் முகைதின் யாசின். தவறு செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் அது சர்ச்சைக்குரிய சமயப் போதகர் டாக்டர் ஜாகிர் நாய்க்காக இருந்தாலும் சரி.
ஜாகிர் நாய்க் பிபிபிஎம் அமைச்சர்கள் உள்பட கட்சித் தலைவர்களின் ஆதரவைப் பெற்றிருக்கலாம் அவர்களைச் சந்தித்திருக்கலாம், அதற்காக அவருக்கு எதிரான விசாரணை நின்று விடாது என்றாரவர்.
“சட்டம் என்ன சொல்கிறதோ அதன்படிதான் நடந்து கொள்வோம்”, என்று முகைதின் கூறினார்.
ஜாகிருக்கு எதிராக 100க்கு மேற்பட்ட புகார்கள் செய்யப்பட்டுள்ளன. அப்புகார்கள்மீது போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.
கடந்த வாரம் அதிகாரிகள் ஜாகிர் நாய்க் பேசுவதற்குத் தடை விதித்தார்கள். பொது இடங்களில் மட்டுமல்லாமல் சமூக ஊடகங்களிலும் அவர் பேசத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிரந்தர வசிபிடத் தகுதி பெற்றுள்ள ஜாகிர், நாட்டின் சட்டங்களை மதித்து நடக்க வேண்டும் என்று முகைதின் கூறினார்