திருமணமாகாத தாயார்களுக்கு உதவ சினிமா விளம்பரம்

மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சு, திருமணமாகாமலேயே குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பெண்களுக்கு உதவ விளம்பரப் படமொன்றைத் தயாரித்துள்ளது.

அந்த 30-வினாடி காணொளி குறித்து நேற்று டிவிட்டரில் கருத்து பதிவிட்டிருந்த துணை அமைச்சர் ஹன்னா இயோ, அதை சிசுக்கள் வீசியெறியப்படுவதைத் தடுக்கும் அமைச்சின் ஒரு முயற்சி என்று வருணித்திருந்தார்.

“மணமாகாமல் கரு தரித்திருந்தால் Kasih-உடன் தொடர்பு கொள்ளுங்கள், தொடர்பு எண் 15999.

“குடும்பத்தாரிடமும் நம்பிக்கைக்குரியவர்களிடமும் ஒளிக்காமல் மறைக்காமல் உண்மையை எடுத்துரையுங்கள்.

“Kafe Teen app மூலம் ஒரு மருத்துவர் அல்லது ஆலோசகரை நாடுங்கள்.

“நீங்கள் தனியர் அல்ல.

“காப்பகங்களில் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் உதவி பெறுங்கள். உங்களுக்கு உதவவே நாங்கள் உள்ளோம்”, என்று அக்காணொளி கூறுகிறது.

இக்காணொளி சினிமா தியேட்டர்களில் படங்களுடன் திரையிடப்படும்.