பணிஓய்வு வயதை உயர்த்த வேண்டியதில்லை- பிரதமர்

இப்போது 60ஆக உள்ள கட்டாய பணிஓய்வு வயதை 65ஆக உயர்த்த வேண்டிய அவசியமில்லை எனப் பிரதமர் டாக்டர் மகாதிர் கூறினார்.

பணிஓய்வு வயதை உயர்த்துவது இளம் தலைமுறையினரின் பணி உயர்வு வாய்ப்புகளைத் தடுப்பதாக அமையும் என்று இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மானின் கருத்தை மகாதிரும் ஒப்புக்கொள்கிறார்.

“அதற்காக, பிரதமருக்கு 94 வயதாகிறது இன்னும் பணி ஓய்வு பெறவில்லையே என்று சொல்லாதீர்கள். நான் திரும்பவும் அழைக்கப்பட்டதால் வேலைக்கு வந்திருக்கிறேன்.

“பணி ஓய்வு வயதை 65 ஆக்கினால், பயனற்றவர்கள் மற்றவர்களின் பணி உயர்வைத் தடுத்தபடி அமர்ந்து கொண்டிருப்பார்கள்.

“என்னைப் பொறுத்தவரை 60வயதில் பணி ஓய்வு பெறுவதே நல்லது என்பேன்”, என்று மகாதிர் கம்போடியாவுக்கான மூன்று-நாள் வருகையின் முடிவில் கூறினார்.