மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் முகம்மட் ரபிக் நய்ஸாமொகைதின், இன்றிரவு நடைபெறும் ஒரு பிரார்த்தனை நிகழ்வில் சர்ச்சைக்குரிய சமயப் போதகர் ஜாகிர் நாய்க் கலந்துகொள்வதை யாரும் , குறிப்பாக டிஏபி, குறை கூறக்கூடாது என்று கூறினார்.
“கோவில்களிலும் தேவாலயங்களிலும் நடைபெறும் சமய நிகழ்வுகள் குறித்து முஸ்லிம் தலைவர்கள் கேள்வி எழுப்புவதில்லை”, என்றாரவர்.
மலாக்கா தொழில், வர்த்தக, முதலீட்டுக்குழுத் தலைவரான முகம்மட் ரபிக், அந்நிகழ்வை மஸ்ஜித் சீனா மலாக்கா தலைவர் என்ற முறையில்தான் ஏற்பாடு செய்திருப்பதாகவும் அரசின் பிரதிநிதியாக அல்ல என்றும் தெளிவுபடுத்தினார்.
“மலாக்கா அரசும் போலீசும் டாக்டர் ஜாகிர் உரையாற்றுவதற்குத்தான் தடை விதித்துள்ளன. பிரார்த்தனைகளில் , இறைவழிபாடுகளில் கலந்துகொள்வதைத் தடுக்கவில்லை”, என்றவர் முகநூலில் பதிவிட்டிருந்தார்.