முவாலிமில் குனோங் லியாங் அருகில் குனாங் தாமாங் பதக்கில் நேற்று மாலையிலிருந்து வழி தெரியாமல் சிக்கிக்கொண்ட 29 மலையேறிகள் அடங்கிய ஒரு குழு நள்ளிரவு வாக்கில் பத்திரமாக மீட்டுக் கொண்டுவரப்பட்டது.
மாலை 6.15க்கு அவர்களைத் தேடிச் சென்ற தேடல் மற்றும் மீட்புக்குழு(எஸ்ஏஆர்) மலையேறிகள் அத்தனை பேரையும் பாதுகாப்புடன் மீட்டுக் கொண்டு வந்ததாக முவாலிம் மாவட்ட போலீஸ் தலைவர் வான் கமருல் அஸ்ரான் வான் யூசுப் கூறினார்.
போலீஸ், தீ அணைப்பு மற்றும் மீட்புத்துறை, சிவில் தற்காப்புப் படை ஆகியவற்றைச் சேர்ந்த 46பேர் எஸ்ஏஆரில் இடம்பெற்றிருந்தனர்.
மலையேறிகள்- அவர்களில் 23 பேர் ஆண்கள் அறுவர் பெண்கள்- நெகிரி செம்பிலான், கோலாலும்பூர் மற்றும் சிலாங்கூரைச் சேர்ந்தவர்கள்.