கடந்த புதன்கிழமை லோக் காவி இராணுவ முகாமில் நடந்த ஒரு நிகழ்வில் மேஜர் முகமட் ஜாகிர் அர்மயா கொல்லப்பட்டதற்குக் கவனக்குறைதான் காரணம் என்பது விசாரணைகளில் தெரிய வருகிறது.
“இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகள் கவனக்கூறைவே மரணத்துக்குக் காரணம் என்பதைக் காட்டுகின்றன, ஆனால் மேலும் விசாரணைகள் நடத்தப்படும்”, என்று சபா மாநில போலீஸ் ஆணையர் ஒமார் மம்மா தெரிவித்தார்.
11வது சிறப்புப் படையைச் சேர்ந்த ஒரு கொம்மாண்டோவான மேஜர் ஜாகிர் அர்மயா, 5வது தரைப்படை டிவிசன் மற்றும் 13வது தரைப்படைப் பட்டாளம் தோற்றுவிக்கப்பட்டதன் தொடர்பில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் இராணுவ வீரர்களின் சாகசங்களின் செய்துகாட்டும் காட்சி ஒன்றில் பங்கேற்றுக் கொண்டிருந்தபோது சுடப்பட்டு மாண்டார்.
அவரது மரணம் குறித்து அரச மலேசிய போலீஸ் முழு விசாரணை மேற்கொண்டிருப்பதாக இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் அப்துல் ஹமிட் படோர் கடந்த வியாழக்கிழமை கூறினார்.