சரவாக்கின் 8 மாவட்டங்களில் தூசு மூட்டம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன

சரவாக்கில் நேற்று மாலை தூசுமூட்டம் மோசமானத்தை அடுத்து இன்று எட்டு மாவட்டங்களில் பள்ளிகளை மூடும்படி உத்தரவிடப்பட்டது.

கூச்சிங், சமராஹான், படாவான், சிரியான், ஸ்ரீ அமான், பெதோங், பாவ், லுண்டு ஆகியவையே அந்த எட்டு மாவட்டங்களாகும் என மாநிலக் கல்வி துணை இயக்குனர் ஆபாங் மாட் அலி ஆபாங் மசாகுஸ் கூறினார்.

ஆனாலும், யுபிஎஸ்ஆர் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் அதில் எந்த மாற்றமும் இல்லை என்றாரவர்.

ஒவ்வொரு நாளும் மாலை 6மணிக்கு காற்றுத் தூய்மைக் கேட்டுக் குறியீடு ஆராயப்பட்டு அதன் அடிப்படையில் மறுநாள் பள்ளிகளைத் திறப்பதா மூடுவதா என்று முடிவெடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.